பதிவு செய்த நாள்
12
டிச
2019
02:12
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் மகா விஷ்ணு தீப உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மகா விஷ்ணு தீப வழிபாடு நடந்தது.இதனையொட்டி, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சுதர்சனர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து, சர்வ அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். பின்னர் பெருமாள் தாயார் உள் பிரகாரம் வலம் சென்று மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். மேலும், ராஜகோபுரம், பெருமாள், தாயார், ஆண்டாள் கோபுரங்கள், ஆஞ்சநேய சன்னதி ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.சாற்றுமுறை சேவை வழிபாடுகளுக்குப்பின் பெருமாள் ராஜகோபுர வாசல் முன் எழுந்தருளச் செய்தபின் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தீப வழிபாட்டினை தேசிக பட்டர் செய்து வைத்தார்.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று, கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சீதா லட்சுமண அனுமன் சமேத கோதண்டராமர் கோவிலிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.