பதிவு செய்த நாள்
13
டிச
2019
12:12
சிங்கம்புணரி: சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோயில்தெரு ஐயப்பன் கோயிலில் 2ம் ஆண்டு வருடாபிஷேக மற்றும் 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது. சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் கன்னிமூல கணபதி, மஞ்சள் மாதா, ஐயப்பன், கருத்தசாமி, கருப்பண்ணசாமி, நாகநாதர் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு வருடாபிஷேக விழா நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மங்கள இசையுடன் நவக்கிரக பூஜை, முதற்கால யாகவேள்விகள், மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. இரவு 8:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, சதுார்வேதம் நடைபெற்றது. நேற்று காலை 7:00 மணிக்கு 2ம் கால யாகவேள்விகளும், 9:45 மணிக்கு 1008 சங்காபிஷேகமும், கலச அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளை சேவற்கொடியோன், அருணகிரி சிவாச்சாரியார் தலைமையிலான 11பேர் கொண்ட குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை ஐயப்பன் ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.