சபரிமலை பக்தர்களுக்காக குமுளிக்கு 100 சிறப்பு பஸ்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2019 12:12
தேனி: சபரிமலை மண்டல பூஜை, மகரஜோதியில் பக்தர்கள் பங்கேற்க வசதியாக குமுளிக்கு 100 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் முருகேசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மண்டல பூஜை டிச. 27, மகர ஜோதி 2020 ஜன.15 ல் நடக்க உள்ளது. பக்தர்களின் வசதிக்காக டிச. 15 முதல் ஜன.16 வரை திண்டுக்கல், பழநி, மதுரை, தேனி, திருச்சி பகுதியில் இருந்து குமுளிக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப கூடுதலாகவும் இயக்கப்படும். குமுளியில் இருந்து சபரிமலை செல்ல இணைப்பு பஸ்களை கேரள போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. சபரிமலை பக்தர்களுக்காக திருச்சி, மதுரை, திண்டுக்கல், பழநி பஸ் ஸ்டாண்ட்களில் வழிகாட்டி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இங்கு முன்பதிவு வசதி உண்டு. பக்தர்கள் பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.