பதிவு செய்த நாள்
14
டிச
2019
02:12
ஈரோடு: பெருந்துறை வேதநாயகி உடனுறை சோழீஸ்வரர் கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு விளக்கு பூஜை மற்றும் அன்னதான விழா, நாளை 15ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, யாகம் நடக்கிறது. தொடர்ந்து ஹோமம், சங்காபிஷேகம், உற்சவர் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து விளக்கு பூஜை, அன்னதானம், தாயம்பகை, தீபாராதனை, மாலை 5:30 மணிக்கு சுவாமி திருவீதியுலா, இரவு 8:30 மணிக்கு திரி உழிச்சல் (வெட்டுதடவு) நடக்கிறது.