பதிவு செய்த நாள்
16
டிச
2019
01:12
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தர்மபுரி எஸ்.வி., ரோட்டில் உள்ள சாலை விநாயகர் கோவிலில், சக்கடஹர சதுர்த்தியையொடி, காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை கள், பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாலை விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், எஸ்.வி., ரோடு, கடைவீதி, வெளிபேட்டை தெரு, சுண்ணாம்புக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித் தார். இதேபோல் நெசவாளர் காலனியில் உள்ள சக்தி விநாயகர் வேல்முருகன் கோவில், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் குபேர கணபதி கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் உள்ள விநாயர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
* சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கிருஷ்ணகிரி பழைய சப்- ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், நேற்று 15ம் தேதி மாலை, 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு, 606 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. பின்னர் விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.