சேதுக்கரை அகத்தியர் தீர்த்தம் அருகே சேதமடைந்த சாலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2019 01:12
சேதுக்கரை: சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள அகத்தியர் தீர்த்தம் குளத்தின் அருகே சேத மடைந்த தார்ச் சாலையில் வாகனங்கள் செல்வதில் சிக்கல் நிலவுகிறது.
ராமநாதபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகள், வெளியூர்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள், யாத்திரீகர்கள் புனித நீராடுவதற்காக சேதுக்கரை கடற்கரைக்கு செல்கின் றனர். புராண சிறப்பினை பெற்ற அகத்தியர் தீர்த்தக் குளம், தற்போது பெய்த மழையால் நிரம்பி காணப்படுகிறது. குளத்தின் அருகே உள்ள தார்ச்சாலையின் ஒரு பக்கம் முழுவதும் சேதமடை ந்துள்ளது. சுற்றுலா வாகனங்கள், டூவீலர்களில் வரும் பொதுமக்கள் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சேதுக்கரை ஊராட்சி நிர்வாகத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும்.