தென்காசி: அச்சன்கோவிலில் இன்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 7,8ம் நாட்களில் கருப்பன் துள்ளலும், 9ம்நாளில் தேரோட்டம், 10நாளில் ஆராட்டு, டிச.27 ல் மண்டல பூஜை நடக்கிறது.
கேரளாவில் உள்ள அச்சன்கோவில் ஐயப்பன் கோயில் திருஆபரணப் பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். இன்று துவங்கி 10 நாட்கள் விழா நடக்கிறது. ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் கொண்ட பெட்டி கேரளாவின் புனலுார் அரசு கருவூலத்தில் உள்ளது. பெட்டியை போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக நேற்று எடுத்து வந்தனர். புனலுார்– அச்சன்கோவில் செல்லும் வழியில் ஆபரணப்பெட்டி தென்காசிக்கு வந்தது. நேற்று மாலை காசிவிஸ்வநாதர் கோயில் முன் ஐயப்ப சேவா சங்கத்தினர், பக்தர்கள் வரவேற்றனர். பின் பண்பொழி, மேக்கரை வழி அச்சன்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.