ராமானுஜர் ப்ரபக்தி இயக்கம், மார்கழி மகோத்சவ கமிட்டி சார்பில், 8ம் ஆண்டு மார்கழி மகோத் சவம், நூறடி சாலையில் அமைந்துள்ள சாரதாம்பாள் கோவிலில் இன்று 17ம் தேதி துவங்கி, மார்கழி 30 நாட்களும் நடக்கிறது. மாலை 5:30மணிக்கு வளரும் கலைஞர்களின் இசை அமுதம், மாலை 6:30 மணிக்கு திருக்கோவிலுார் ஜீயர் ஸ்வாமிகளின் சிஷ்யை சாந்தலட்சுமி ராமச் சந்திரனின் ’திருப்பாவை உபன்யாசம்’ நடக்கிறது.முக்கியமாக இன்று (17ம் தேதி) முதல் 25ம் தேதி வரையில் மாலை 7:00 மணி முதல் 9:00 வரையில், தென்திருப்பேரை அரவிந்தலோசநன் சுவாமிகளின் ராமாயண உபன்யாசம் நடக்கிறது.26ம் தேதி முதல், இரவு 7:15 மணி முதல் 9:00 வரையில் 200க்கும் மேற்பட்ட பிரபல இசைக் கலைஞர்களின் இசை, நாட்டியம் மற்றும் நாம சங்கீர்த்தனை நடக்கிறது.