புதுச்சேரியில் புத்துணர்வு முகாமில் மணக்குள விநாயகர் கோவில் யானை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2019 02:12
புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, மேட்டுப்பாளையத்தில் நடை பெறும் புத்துணர்வு முகாமில் பங்கேற்க புறப்பட்டு சென்றது.
தமிழக அரசு, கோயில் யானைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை 48 நாட்களுக்கு புத்துணர்வு முகாமை நடத்தி வருகிறது. இதில், புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி பங்கேற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் நேற்று முன்தினம் 15ம் தேதி துவங்கியது. முகாமில் பங்கேற்க, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நேற்று 16ம் தேதி புறப் பட்டது.
முன்னதாக, யானைக்கு கால்நடைத்துறை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்ததுடன், தடுப்பூசி போட்டு தயார்படுத்தினர்.அதைத் தொடர்ந்து, நேற்று 16ம் தேதிகாலை யானை லட்சுமிக்கு கோயிலில் கஜபூஜை நடத்தி, பிரசாதங்கள் வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு, தாவரவியல் பூங்காவில் யானை லட்சுமி லாரியில் ஏற்றப்பட்டு மேட்டுப் பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. யானையுடன் இரு பாகன்கள் உடன் சென்றனர்.