அம்பாள்புரத்தில் புற்றில் அம்மன் உருவம் பொதுமக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2019 02:12
சேத்தியாத்தோப்பு : அம்பாள்புரத்தில் ஆதிபராசக்தி மன்ற கோவிலில் அம்மன் முக வடிவில் தோன்றிய புற்றினை மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த அம்பாள்புரம் வடக்கு தெருவில் ஆதிபராசக்தி வழிபாடு மன்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மாலை அணியும் பெண்கள், ஆண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.இந்த கோவிலில் வழிபாடு செய்யும் இடத்திற்கு பின்புறம், சுவரில் அம்மன் முக வடிவல் புற்று உருவாகியுள்ளது. வழிபாட்டிற்கு சென்றவர்கள் புற்றினை கண்டு அங்குள்ள மக்களிடம் அம்மன் வடிவில் புற்று உருவாகியுள்ளதை தெரிவித்தனர்.
இதை அடுத்து அப்பகுதி மக்கள் புற்றுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் குங்குமம் அலங்காரம் செய்து தீபாராதனை செய்து வருகின்றனர். புற்றிற்கு தினமும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.