பதிவு செய்த நாள்
18
டிச
2019
11:12
பழநி : பழநிக்கு தைப்பூசத்திற்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காக திஷா பூஜை நடக்கிறது. மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு பழநிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காக திஷா யாக பூஜை நேற்று முதல் துவங்கியது. ஆனந்த விநாயகருக்கு கணபதி ஹோமம், கலச பூஜையுடன் பல்வேறு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்தது.
டிச. 18 ல் வீரதுர்க்கைக்கு அபிஷேகங்களுடன் கலசபூஜை, டிச. 19 ல் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் திஷா ஹோமம் நடைபெறும். டிச. 20 ல் அழகுநாச்சியம்மன் கோயிலில் கலச பூஜையும், டிச. 21 ல் சின்னகலையம்புத்துார் கைலாசநாதர் கோயிலில் கலச பூஜை நடைபெறும். டிச. 22 ல் தெற்கு கிரிவீதி வனதுர்க்கை அம்மன் கோயிலிலும், டிச. 23 ல் பாதவிநாயகர், கருப்பணசாமி, கன்னிமார், பைரவர், பைரவிக்கு பலி பூஜையும், டிச. 24ல் மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு அபிஷேகம், இடும்பன் கோயிலில் நெய்வேத்தியமும் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயச்சந்திரபானுரெட்டி, உதவி ஆணையர் செந்தில்குமார் செய்துள்ளனர். அமிர்தம், செல்வசுப்பிரமணியன் குருக்கள் தலைமையில் பூஜைகள் நடக்கிறது.