பதிவு செய்த நாள்
18
டிச
2019
11:12
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில், ஜன., 6ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்னும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவின் முன்பு, பகல் பத்தும், பின்பு ராப்பத்து உற்சவமும் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, வருகிற, 27ம் தேதி, திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து உற்சவம் துவங்குகிறது.
அதை தொடர்ந்து, ஜன., 6 ம் தேதி, வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. அன்று இரவு, திருவாய் மொழித் திருநாள் என்னும் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. 13ம் தேதி குதிரை வாகன உற்சவமும், 15ம் தேதி திருவாய் மொழித் திருநாள் சாற்றுமுறை உற்சவம் பூர்த்தியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன் மற்றும் கோவில் ஊழியர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.