ஸ்ரீவில்லிபுத்துார்: மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகளை ராஜாபட்டர் செய்தார். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடாக, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களை சேர்ந்த ஐயப்பன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிேஷகம், சிறப்பு பூஜைகளை ரகுபட்டர் செய்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* பெரியமாரியம்மன் கோயில், முருகன் கோயில்களும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மார்கழி மாதபிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அதிகாலையில் கோயில்கள் திறக்கபட்டதை முன்னிட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.