பதிவு செய்த நாள்
18
டிச
2019
11:12
தேனி: மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் நேற்று அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது. தேனி அல்லிநகரம் வரதராஜபெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி., நகர் கணேச கந்தபெருமாள் கோயில், வேல்முருகன் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில், பாலசுப்பிரமணியர் கோயில், மீனாட்சியம்மன் கோயில், கைலாசபட்டி கைலாசாநாதர் கோயில், கம்பம்ரோடு காளியம்மன் கோயில், பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர்கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையம், வணிக வைசியர் சங்க விநாயகர் கோயில், லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில், காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு பூசணிப்பூ வைத்து சூரியபகவானை வழிபட்டனர்.