பாதை மாறுவதால் சபரி ரோப்வே நனவாகுமா பக்தர்கள் கவலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2019 12:12
சபரிமலை : பாதை மாறுவதால் சபரிமலை ரோப்வே திட்டம் நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பம்பை- சன்னிதானம் ரோப்வே திட்டம் 2001ம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. இதற்காக சர்வே முடிந்து கடந்த உம்மன்சாண்டி அரசின் கடைசி நாட்களில் பூமி பூஜை நடத்துவதாக அறிவிக்கப்பட்டு திடீரென அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பம்பை- சன்னிதானம் இடையே 2.98 கி.மீ. துாரம் அமைக்க சர்வே பணி முடிக்கப்பட்டது. இதற்காக துாண்கள் அமைக்க மண் பரிசோதனைக்கு தேவசம்போர்டு வனத்துறையிடம் அனுமதி கோரியது. துாண்கள் அமைக்கும் பகுதியில் மரங்களை வெட்ட வேண்டும் என்பதால் வனத்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில் பம்பை-சன்னிதானம் என்பதை மாற்றி நிலக்கல்- சன்னிதானம் இடையே 4.08 கி.மீ. துாரம் ரோப்வே அமைக்க தேவசம்போர்டு திட்டமிட்டு வருகிறது. இது ஏற்கனவே திட்டமிட்டதை விட1.10 கி.மீ. அதிகம். இதற்கு சர்வே எடுத்து அதன் பின்னர் வனத்துறை கூடுதல் எதிர்ப்பு தெரிவிக்கும். இதனால் ஏற்கனவே இத்திட்டம் அறிவிப்பு வந்து 18 ஆண்டுகள் ஆன நிலையில் மேலும் தாமதமாகும் என்று பக்தர்கள் கவலைப்படுகின்றனர்.