தேவகோட்டை : மார்கழி பிறந்ததை தொடர்ந்து தேவகோட்டை கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி சிறப்பு பூஜை துவங்கியது.சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில்,மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கோதண்டராமஸ்வாமி கோயில், கிருஷ்ணர் கோயில், கைலாசநாதர் கோயில், கைலாச விநாயகர் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் உட்பட தேவ கோட்டையில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது.