மையத்திலிருந்து விளிம்பு நோக்கி ‘காரிருளில் நடந்து வந்த மக்கள், பேரொளியைக் கண்டார்கள்’ (எசாயா: 9:2) என்ற இறைவார்த்தை இயேசுவின் பிறப்பு என்பது வாழ்வின் விளிம்பு நிலையில் வாழ வழியின்றி இருப்போருக்கான பேரொளி என்பதை சுட்டிக் காட்டுகிறது.
மெசியாவைக் காண பலருடைய கண்கள் ஏங்கி கொண்டிருந்தாலும் கடவுளது திருவுளம் அவரது பிறப்பை சாதாரண இடையர்களுக்கு வானதுாதர் வழியாக அறிவித்தது. “அஞ்சாதீ ர்கள் இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவி க்கிறேன்” (லுாக்கா : 2 : 10) என்று அறிவித்தது. இயேசுவின் பிறப்பு மையத்தை நோக்கிய தல்ல மாறாக விளிம்பை நோக்கிய பிறப்பு என்பதை சுட்டிக் காட்டுகிறது.
மனித இயல்பு என்பது வலிமையானவரையும், வல்லமை நிறைந்தவரையும், நன்மதிப்பு பெற்றவரையும் தேர்ந்தெடுத்து அதிலே பெருமை கொள்வது. ஆனால் இறைஇயல்பு என்பது ஒதுக்கப்பட்ட, சாதாரணமாக இருப்பவர்களை அசாதாரணமாக மாற்றும் ஆற்றல் கொண்டது. எனவே தான் பார்க்கிறோம். தனது இறை மகனைக் கூட பெயரும், புகழும் விளங்கிய ஊரிலி ருந்து மனிதராக பிறக்கச் செய்யாமல் யாராலும் கண்டுகொள்ளப்படாத யூதாவில் உள்ள அப்பத்தின் வீடாகிய பெத்லகேமிலே பிறக்கச்செய்து, அவரது பிறப்பால் விளிம்பை மையத் திற்கு நகர்த்துகிறார்.
தந்தையாகியவர் கடவுள். கடவுளது இந்த மாபெரும் செயல் நமது கண்களுக்கு வியப்பான தாய் தோன்றினாலும், கடவுள் எப்போதுமே விளிம்பை நோக்கி பயணிப்பவராக இருக்கிறார் என்கிற ஆழமான உண்மையை இந்த அற்புதமான கிறிஸ்து பிறப்பு நமக்கு வெளிப்படுத் துகிறது. மையத்திலிருந்து விளிம்பு நோக்கி பயணித்த இறை திருவுளம் நம்மிடம் எதிர் பார்ப்பதும் சிக்கெனப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பதும் நமது பாதுகாப்பு வளையத்தை விட்டு, மையத்தைத் தேடி அமர விரும்பும் மனநிலையை ஒரங்கட்டி விட்டு விளிம்பை நோக்கி பயணிக்கவே.