பதிவு செய்த நாள்
18
டிச
2019
02:12
போத்தனுார் : சுந்தராபுரத்தில், ’கோவை மார்கழி திருவிழா - 2019’ எனும் ஆன்மிக சொற் பொழிவு நிகழ்ச்சி, நேற்று 17ம் தேதி துவங்கியது.
சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோட்டிலுள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் துவக்கமாக, ஜான்சுந்தர் முகப்பு பாடலை பாடினார். பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றம் சார்பில், திருமுறை பாராயணம் நடந்தது. தொடர்ந்து, ’தினம் தினம் தெய்வீகம்’ எனும் தலைப்பில், ஸம்ப்ரதிஷ்டானந்தா பேசுகையில், ”கடவுளுடன் நாம் பூஜை, வழிபாடு மற்றும் தியானம் ஆகிய வழிகளில் பேசலாம். காலை நேர பூஜை சிறந்தது.
ஒவ்வொரு வீட்டிலும், கடவுளுக்கென தனியிடம் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்தான், அனைவருக்கும் முதன்மையானவர். பூஜை செய்வதன் மூலம், கை, வாய் மற்றும் மனது ஒருங்கிணைகிறது,” என்றார். முன்னதாக, பிருந்தாவன் வித்யாலயா பள்ளி மாண்வர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இன்று 18ல் ’அப்பரின் வாழ்வும், வாக்கும்’ எனும் தலைப்பில் தியாகராஜன் பேசுகிறார். நாளை 19ம் தேதி’ஆதியும் அந்தமும் இல்லாதவன்’ எனும் தலைப் பில், பூங்கொடி பேசுகிறார். ஏற்பாடுகளை கோவை மார்கழி திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.