பதிவு செய்த நாள்
18
டிச
2019
02:12
அன்னுார் : அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில் காலை 4:30 மணிக்கு அபிஷேக பூஜையும், 5:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது.
கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 6:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல், கோவிலில் பெருமாளை வழிபட்டனர்.கணேசபுரம் அடுத்த, குருக்கம் பாளையத்தில், நாம சங்கீர்த்த பஜனை நடக்கிறது. அதிகாலை 4:00 மணிக்கு, செல்வ விநாயகர் கோவிலில் பஜனை துவங்கி மாகாளியம்மன் கோவில் வழியாக சென்று, மீண்டும் செல்வ விநாயகர் கோவிலை பஜனை குழு அடைந்தது.
பஜனை குழுவை வரவேற்று, வீடுகளின் முன்புறம் கோலம் போடப்பட்டிருந்தது. மார்கழி முழுவதும், பஜனை ஊர்வலம் நடக்க உள்ளது.