வால்பாறை : வால்பாறை அடுத்துள்ளது தாய்முடி இரண்டாவது பிரிவு. இங்குள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நேற்று 17ம் தேதி காலை, 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில், வரும், 24ம் தேதி இரவு, 7:30 மணிக்கு அம்மன் கும்பஸ்தானம் செய்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 25ம் தேதி மாலை, 3:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்த ருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.வரும், 26ம் தேதி பக்தர்கள் அலகுபூட்டி கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப் படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.