கம்பம் : சுருளி வேலப்பர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 46 வது ஆண்டு ஐயப்ப சுவாமி ஊர்வ லம், விளக்கு பூஜை நடந்தது.
சுருளி வேலப்பர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் வேலப்பர் கோயில் அருகில் உள்ள மண்டப த்தில், ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். பின்னர் நுாற்றுக்கணக்கான பெண்கள் விளக்கு பூஜை செய்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்பன்விக்ரகம் ,வேலப்பர் கோயில் வீதி, மெயின் ரோடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, காந்திஜி வீதி வழியாக ஊர்வலம் வந்து மண்டப த்தை அடைந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் மண்டபத்தில் இருந்து இருமுடிகட்டி சபரிமலை க்கு யாத்திரை புறப்பட்டனர். குருசாமி நாராயணன், இருமுடி கட்டி பயணத்தை துவக்கி வைத்தார். முன்னதாக டாக்டர் மோகனசுந்தரம், சபரிமலை பக்தர்களுக்கு வஸ்த்ர தானம் வழங்கினார்.