பதிவு செய்த நாள்
18
டிச
2019
02:12
குளித்தலை: குளித்தலையை சுற்றியுள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில், குளிர்ச்சி கும்பிடும் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை அடுத்த, குமாரமங்கலம், மேட்டுமருதூர், கூடலூர், பரளி, மருதூர், வீரம்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில், கார்த்திகை தீபத்திற்கு பிறகு கிராம கோவில்களான மாரியம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் குளிர்ச்சி கும்பிடும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், மாரியம்மனுக்கு குளிர்ச்சியாக உள்ள நீர் மோர், பானகம், இளநீர், பொங்கல், சுண்டல் வைத்து சுவாமியை கும்பிட்டனர். கிராம மக்கள் மாவிளக்கு எடுத்தும், வீட்டில் உள்ள சுவாமிக்கு படையலிட்டு, இளநீர், மஞ்சள் கயிறு, மீன் குழம்பு வைத்து வழிபட்டனர்.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மாரியம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவில்களில் சிறப்பாக குளிச்சி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.