களக்காடு : களக்காட்டில் சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் நேற்று துவங்கியது. களக்காடு பெரியதெரு வேதபாட சாலையில் சங்கர ஜெயந்தி நேற்று துவங்கி நடந்து வருகிறது. வரும் 26ம் தேதி சங்கர ஜெயந்தியன்று காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நான்கு வடுக்களுக்கு உபநயனம் நடைபெறுகிறது. இதில் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீசங்கர ஜெயந்தி உத்ஸவ குழுவினர் கேட்டுள்ளனர்.