உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் சாரதா தேவியின் 166ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி ரதோற்சவம் மற்றும் சிறப்பு ஹோமம் நடந்தது.
உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் சாரதாதேவியின் 166ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. விழா, நேற்று அதிகாலை 4:45 மணியளவில் மங்கல ஆர்த்தியும், சுப்ரபாதம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. காலை 5:15 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது. 8:00 மணியளவில் சாரதாதேவி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ரதோற்சவ பஜனை நடந்தது.ரதோற்சவத்தை சாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
10:30 மணியளவில் வேதபாராயணம், அர்ச்சனை நடந்தது. 11:00 மணியளவில் சிறப்பு ஹோமம் நடந்தது. அதனைத்தொடர்ந்து நித்திய விவேக பிரியா அம்பா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக பிரம்மச்சாரணி யாக்ன பிரணமா மாஜி சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரம சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.