பதிவு செய்த நாள்
19
டிச
2019
02:12
மந்தாரக்குப்பம்: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை மந்தாரக்குப்பத் தில் நடந்தது. அகில பாரத ஜயப்ப சேவா சங்கம் மற்றும் டைகர் குருசாமி குரூப் இணைந்து 17ம் ஆண்டு ஐயப்பன் திருவிளக்கு பூஜை நடந்தது.
இதனையொட்டி நேற்று முன்தினம் 17ம் தேதி இரவு ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, படி அலங்காரம் செய்து, 1,008 அர்ச்சனை, ஐயப்பன் பஜனை பாடல்கள் பாடி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.இதில் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சபரி மலைக்கு மாலை அணிந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் சாமிநாதன், யாகமூர்த்தி, ராஜமாரியப்பன், நகர நிர்வாகிகள் நாகராஜ், சிவகைலாசம், ராஜ்குமார், வேலுச் சாமி, ஜயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.