கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டையில், சிவனடியார்கள் குழு சார்பில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, அதிகாலை நேரத்தில் திருவெம்பாவை பக்தி பாடல்கள் பாடி திருவீதி உலா வந்தனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த சிவனடியார்கள், ஆண்டுதோறும் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, சிவன் பாடல்கள் பாடி ஊர்வலமாக வலம் வருவது வழக்கம். நேற்று 18ம் தேதி மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்து விட்டு செம்பேற்ஜோதிஸ்வரர் கோவிலில் இருந்து அப்பர், சுந்தரர், திருநாவுக் கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரின் படங்கள் வைத்து லாலாப்பேட்டை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பக்தி பாடல்கள் பாடியவாறு வலம் வந்தனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பாடல்கள், 30 நாட்கள் வரை நடைபெறுகிறது.