பதிவு செய்த நாள்
19
டிச
2019
02:12
ஈரோடு: ஈரோட்டின் ஐந்து வகையான வரலாற்று காரணிகள் குறித்து, அருங்காட்சியகம் சார்பில் தகவல் திரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு, வரலாற்று பதிவுகளை அதிகம் கொண்டுள்ள மாவட்டம் என்று சொன்னால், அது மிகையல்ல. மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், அதை உறுதிபடுத்தும் எண்ணிலடங்கா பொருட்கள் அதற்கு சான்றாக வைக்கப்பட்டுள்ளன. இதை, மேலும் மெருகூட்டும் விதமாக இந்த மாவட்டத்தின் ஐந்து வகையான வரலாற்று பதிவுகளை திரட்டும்படி கலைபண்பாட்டுத் துறை, காப்பாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. அதில், ஈரோடு மாவட்டத்தின் பொருளாதார வரலாறு, சமூக வரலாறு, அரசியல் வரலாறு, நிலம் (புவி) சார்ந்த வரலாறு, கலாசார வரலாறு ஆகிய ஐந்து வகையான தகவல்களை அருங்காட்சியகம் சார்பில் திரட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி கூறியதாவது: அரசு அருங்காட்சி யத்தை மேம்படுத்த, பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. முதலில், இம்மாவட்டத்தில் ஐந்து வகையான வரலாற்று பதிவுகள் திரட்டப்பட்டு வருகிறது. திரட்டும் பணிகள் முடிந்த பின், அருங்காட்சியத்தில் அவை காட்சிப்படுத்தப்படும், அதன் பின் புத்தகமாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் திரட்டும் பணிகள், 50ச தவீதம் நிறைவு பெற்றுள்ளது. இது வெளிவரும் போது, ஈரோடு மாவட்டத்தின் தகவல் பொக்கிஷமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.