ஈரோடு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2019 02:12
ஈரோடு: கும்பாபிஷேக விழாவையொட்டி, ஈரோடு சக்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் தொடங்கியுள்ளன.
ஈரோடு, கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள, முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோவிலில் கடந்த, 2007 ஜன., 28ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, 2020ல் கும்பாபிஷேகம் நடத்த ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் கங்காதரன் கூறியதாவது: முனிசிபல் காலனி, சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கான புனரமைப்பு திருப்பணிகள் தொடங்கியுள்ளன. கோவில் சிற்பங்கள் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதால், பஞ்ச வர்ணம் பூசப்பட்டு சிறுபணிகள் மட்டுமே செய்யப்படுகிறது. கோபுர கலசம் புதுப்பிக்கப்பட உள்ளது. அதற்காக கோபுர கலச பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.
அதனால், தற்போது கோபுர தரிசனம் செய்ய முடியாது. மூலவரை வழக்கம் போல் தரிசனம் செய்யலாம். கோவில் திருப்பணிக்கு பொருள் உதவி செய்ய விரும்பும் கொடையாளர்கள், கோவில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும். இவ்வாறு அவர் கூறினார்.