மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுாரில் தெப்பல் உற்சவம் நடந்தது. விழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் 18ம் தேதி மதியம் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள ராமர் சீதை லட்சுமணனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள தெப்ப குளத்தில் ராமர், சீதை, லட்சுமணன் சுவாமி தெப்பல் உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.