திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்த ருளியுள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் முடிந்து புஷ்ப அலங்காரமானது.
திருநகர் சித்தி விநாயகர் கோயில், பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயில், எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளியம்மன் கோயில்களில் பைரவர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மேலுார் சிவன் கோயிலில் இருந்து நகரின் முக்கியவீதிகள் வழியாக விநாயகர் மூஷிக வாகனத் திலும், முருகன்,வள்ளி, தெய்வானை மயில் வாகனத்திலும், சோமாஸ்கந்தர் ரிஷப வாகனத் திலும், சண்டிகேஸ்வரர் கேடகத்திலும் எழுந்தருளினர். முன்னதாக சிவாச்சாரியார்கள் தட்சிணா மூர்த்தி, ராஜா தலைமையில் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.