பதிவு செய்த நாள்
21
டிச
2019
12:12
பல்லடம்:மார்கழி மாதத்தை முன்னிட்டு, பல்லடம் சத்யசாயி சேவா சமிதியின் சார்பில், ஆண்டுதோறும், மார்கழி உற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாம் ஆண்டு விழா, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் நாளை துவங்குகிறது.விழாவில், தினமும் மாலை, 6.15 மணிக்கு சாய் பஜனையும், அதை தொடர்ந்து, பரத நாட்டியம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவை நடக்கின்றன. இரவு, 8.00 மணிக்கு பல்வேறு தலைப்புகளில், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளனர். விழாவை, கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கி வைக்க உள்ளார். அதை தொடர்ந்து, அகிலம் உய்ய அழகன் வந்தான் எனும் தலைப்பில், புலவர் ராமமூர்த்தி சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.