மதுரை : மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் விழா டிச.,22 ல் நடக்கிறது.
காலை 9:00 மணிக்கு கும்ப பூஜை, காலை 10:30 மணிக்கு சுதர்சன ஹோமம், நரசிம்மர் ஹோமம், சுத்த ஹோமம், பகல் 12:00 மணிக்கு அன்னதானம், பகல் 1:30 மணிக்கு சுதர்சன ஹோமம், அலங்கார திருமஞ்சனம், மாலை 4:00 மணிக்கு திருவாராதனம் நடக்கிறது. விழாக்குழு தலைவர் சூரியமூர்த்தி தலைமையில் ஏற்பாடுகள் நடக்கிறது.