பல்லடம்:பல்லடம் வனம் அமைப்பின் சார்பில், ’மார்கழி மகத்துவம்’ எனும் ஆன்மிக திருவிழா, திருச்சி ரோடு வனாலயம் அலுவலகத்தில் நடந்தது.’வனம்’ செயலாளர் சுந்தரராஜன் வரவேற் றார். தலைவர் சுவாதி கண்ணன், செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், கவுரவத் தலைவர் நாச்சிமுத்து, பொருளாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
வரன்பாளையம் திருநாவுக்கரசர் திருமடத்தை சேர்ந்த மவுன சிவாச்சல அடிகள் பேசிய தாவது:தேவருக்கு இல்லாத சிறப்பு மனித பிறவிக்கு உண்டு. அவரவரின் நோக்கத்தை பொறுத்தே புண்ணிய, பாவங்கள் இருக்கும். அப்படிப்பட்ட புண்ணிய, பாவங்களை பிறவிக்கு காரணமாக அமைகின்றன. பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றவே, இறைவன் நம்மையும் உலகத்தையும் படைத்திருக்கிறான். வாழ்க்கையில் நல்ல காரியங்களை செய்து, இறைவனுக்கு கருவியாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.