கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி ஆகாஷா சொர்ணகால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.மாலை, 5:30 மணிக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம் போன்ற பொருட்களால் அபிஷேக பூஜை நடந்தது.இரவு, 7:00 மணிக்கு ஆகாஷா சொர்ணகால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபராதனை காண்பிக்கப்பட்டது. கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பைரவரை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.