பதிவு செய்த நாள்
23
டிச
2019
10:12
நாமக்கல்: மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1,008 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நாமக்கல்லில் உள்ள, ஆஞ்சநேயர் ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும் வகையில், ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதேபோல், நேற்று மார்கழி முதல் ஞாயிறை முன்னிட்டு காலை, 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. 11:00 மணிக்கு நல்லெண்ணெய், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.