Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் ... ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்: அறை வாடகை உயர்வு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் முறைப்படி பெரியகோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தமிழ் முறைப்படி பெரியகோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 டிச
2019
10:12

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் பெரியகோவிலில், 23 ஆண்டுக்கு பின், பிப்ரவரி, 5ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று தஞ்சை பெரியகோவிலுக்கு, 11 சித்த மடத்தை சேர்ந்த, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வந்தனர். சிவன் அடியார்கள், கருவூரார் சித்தர் கூறியபடி, தமிழ் வேத முறையில், கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வேத மந்திரங்களை தமிழில் முழங்கிப்படி கோவிலை அவர்கள் வலம் வந்தனர்.

பின் இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவர் பொன்னுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை பெரியகோவில் 1997ல், கும்பாபிஷேகத்தின் போது, தீவிபத்து ஏற்பட்டு 48 பேர் மரணமடைந்தனர். அதன்பின், எந்தவித முறையான பரிகாரமும் செய்யப்படாமல், அவசர கதியில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடியாமல் தடைப்பட்டு வந்தது. தற்போது, 23 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பரிகார பூஜைகளை செய்யாமல், கருவூரார் சித்தர் நெறிக்கு மாறாக, மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் நலனை மனதில் வைத்துக் கொள்ளாமல், கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. எனவே, சித்தர் நெறியின் படி செந்தமிழ் மொழியில், இந்து வேதங்களின் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இதுதொடர்பாக முதல்வர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல்வாதிகளுக்கு ஆபத்து ஏன்? கருவூரார் சித்தர் நெறிப்படி, தமிழில் பூஜைகள் செய்ய வேண்டும், கோவில் கருவறைகளில் பூஜைகள் செய்பவர்கள் உள்ளிட்ட, 48 வகையான பணியாளர்கள், தமிழர்களாக தான் இருக்க வேண்டும் என்ற நெறிமுறைகளை கூறினார். ஆனால் அதை மன்னன் ராஜராஜசோழன் உடனடியாக நிறைவேற்றவில்லை. இதனால் கோபமடைந்த கருவூரார், நாடாளும் பொறுப்பிலுள்ள அரசர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், தளபதிகள் இக்கோவிலுக்கு வந்து சென்றால், கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என, சாபமாக வழங்கினார். அதனால் தான், இங்கு வரும் அரசியல்வாதிகள் பிரச்னைக்கு ஆளாகி வருகின்றனர் என்றும், பொன்னுசாமி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மத்தியப் பிரதேசம்; மகா கும்பமேளாவையொட்டி, ராமர், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் 12 ஆண்டுகள் வனத்தில் இருந்த ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருச்சி:  காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி ... மேலும்
 
temple news
கோவை; உ.பி.,யிலுள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி, ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 12வது நாள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar