பதிவு செய்த நாள்
23
டிச
2019
10:12
நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், நாளை காலை திருப்பாவையின் எட்டாவது பாடலோடு, மார்கழி மாத வழிபாடு நடக்கிறது.
பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை, உடனடியாக நிறைவேற்றும் வல்லமை பெற்ற லட்சுமி நரசிம்ம பெருமாளை வழிபட, உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் பக்தர்களும் வருவது வழக்கம்.இக்கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி, தினமும் காலை 5:00 மணிக்கு திருப்பாவை பாடலுடன், பெருமாள் வழிபாடு நடக்கிறது. திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.நாளை காலை 5:00 மணிக்கு, கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு... என்ற திருப்பாவையின் எட்டாவது பாடலை, பெருமாள் பக்தர்கள் பாடுகின்றனர். பாடலின் பொருள்கீழ்வானம் வெளுத்து விட்டது. எருமைகள், பனிப்புல்லை மேயச் சென்று விட்டன. நோன்பு நீராடப் புறப்பட்டவர்களையும் உனக்காக நிறுத்தி வைத்து, உன்னை அழைத்து செல்வதற்காக உன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறோம். குதுாகலமானவளே.. எழுந்திரு, கண்ணனை பாடி, நோன்பிற்கு வேண்டியவற்றை தருமாறு வேண்டுவோம். குதிரை வடிவான அசுரனின் வாயை பிளந்தவனும், மல்லர்களை அழித்தவனும், தேவாதி தேவனுமாகிய நாராயணனை வணங்கினால், அவன் மனமிறங்கி நமக்கு அருள் செய்வான்.