பதிவு செய்த நாள்
24
டிச
2019
11:12
சென்னை : சென்னை, வடபழனி முருகன் கோவிலில், மார்கழி மாத அதிகாலை நகரசங்கீர்த்தன நிகழ்ச்சியில், குழந்தைகளும் ஆர்வமுடன் பக்திப்பாடல்களை பாடி வருகின்றனர்.
வடபழநி முருகன் கோவில், இந்தாண்டு மார்கழி மாதம் துவங்கியதில் இருந்து, நகரசங்கீர்த்தனம் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, தெய்வங்களுக்கே உரிய மார்கழி மாதத்தில், பனிவிலகாத, சூரியன் கண்விழிக்காத அதிகாலை நேரத்தில், குளித்து, நெற்றியில் திருநீறிட்டு, இறைவனின் திருவீதியை வலம் வந்து, அவன் திருநாமத்தைப் பாடினால், கூடாத நற்பலனும் கைகூடும் என்பர். அந்தவகையில், வடபழநி ஆண்டவர் கோவிலின், திருவீதிகளில், திருவெம்பாவை, திருப்புகழ் மற்றும் பக்திப்பாடல்களை பாடியபடி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதில், குழந்தைகளும் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். இதுகுறித்து, அக்குழந்தைகள் கூறுகையில், அதிகாலையில் எழுந்து குளிப்பதால், குளிர் விலகுகிறது. ஆக்சிஜன் நிறைந்த காற்றை சுவாசிப்பதால், உடல் புத்துணர்ச்சியடைகிறது. பாடல்களை பாடுவதால், மனம் ஒருநிலை்பட்டு, மனப்பாடம் செய்யும் சக்தி அதிகரிக்கிறது என்றனர்.