மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் ஐயப்பன் சுவாமி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் - காரமடை சாலை சிவன்புரத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஐயப்ப சேவா சமிதியின், 60வது ஆண்டு விழா மற்றும் 29வது மண்டல மஹோற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன.கடந்த மாதம், 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. ஐயப்பன் சுவாமிக்கு தினமும், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகளும், சுற்றுவிளக்கு நிறைமாலை புஷ்பாபிேஷகமும், பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், அன்னதானம் வழங்கப்பட்டது.ஐயப்ப சுவாமி ஊர்வலம், ஊட்டி சாலை மைதான மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கியது. செண்டை மேள வாத்தியத்துடன் சுவாமியின் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தது. இரவு வாண வேடிக்கையும், மகா தீபாராதனையும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.