ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்: அறை வாடகை உயர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2019 10:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வட மாநில பக்தர்கள் குவிந்ததால், விடுதிகளில் அறை வாடகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டில்லி, கோல்கட்டா, மும்பை, ம.பி., உ.பி., ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரம் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் டிச.18 முதல் 30 வரை ராமாயணம், மகாபாரதம் சொற்பொழிவு நடத்துகின்றனர். சுற்றுலா பயணிகளால் விடுதிகளில் அறைகள் நிரம்பியுள்ளது. இச்சூழலை பயன்படுத்தி சில நாள்களாக ராமேஸ்வரத்தில் பல விடுதிகளில் இரு மடங்கு வாடகை உயர்த்தி ரூ.3 முதல் 4 ஆயிரம் வரையும் (வழக்கமாக ரூ.1200 முதல் 1500 கட்டணம்), அங்கீகாரம் இல்லாத விடுதிகளில் ஒரு நபருக்கு ரூ.300 வரை (வழக்கமாக ரூ.100 கட்டணம்) வசூலிக்கின்றனர். ஏழை பக்தர்கள் விடுதிகளில் தங்க வசதியின்றி ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விடுதிகள், டூபாக்கூர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முன் வர வேண்டும்.