ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டி நன்மை தருவார் கோயில் வளாகத்தில் ஐயப்ப சுவாமி வரலாறு குறித்த நிகழ்வுகளை சிலைகளாக வடிவமைத்துள்ளனர். இக்கோயில் வளாகத்தில் 49 அடி உயர மாகாளியம்மன் சிலை, குருபகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஐயப்ப சுவாமி வரலாறு குறித்த நிகழ்வுகளை சிலைகளாக வடிவமைத்துள்ளனர். காட்டு விலங்குகள் மத்தியில் ஐயப்ப சுவாமி குழந்தை வடிவமாக படுத்திருப்பதை சிலையாக வைத்துள்ளனர். அருகில் யானை, புலி, மான் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. பக்தர்கள் அதைபார்த்து வரலாற்று தகவல்களை அறிந்து செல்கின்றனர்.