பதிவு செய்த நாள்
24
டிச
2019
01:12
மதுரை: மதுரை சொக்கிகுளம் காஞ்சி காமகோடி பீடத்தில் காஞ்சி பெரியவரின் 26வது ஆராதனை விழா மற்றும் அனுஷ வைபவம் நடந்தது. மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
‘குரு மகிமை’ என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசியதாவது: ‘திருப்பாவை 30 பாடல், திருவெம்பாவை 20 பாடல், திருப்பள்ளி எழுச்சி 10 பாடல்களை மனதில் பதிய வைத்து வாழ்ந்தால் கஷ்டம், துன்பங்கள் தீரும்’ என காஞ்சி பெரியவர் கூறியுள்ளார்.
ஆண்டாளுக்கு திருப்பாவையின் 27வது பாடலில் பெருமாளே அருள் புரிந்துள்ளார்.
பொருள், வீடு, சுகங்கள் அருள்பவர் பெருமாள். காம, மோக, மத மாச்சார்யங்களை அழித்து மனிதருக்கு ஞானம் அளிப்பவர் சிவன், என்றார்.
சந்திரசேகரன், மகாலிங்கம், வைத்யநாதன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், ஜனார்த்தனன் ஏற்பாடுகளை செய்தனர். மடத்தின் பொருளாளர் குமார் நன்றி கூறினார்.