ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமாக இறைவனை வழிபாடு செய்துள்ளார்கள். இந்த கலியுகத்தில் இறைவனை பாடி வழிபாடு செய்வது சிறந்தது என்று ஆண்டாள் நாச்சியார், தான் பாடிய திருப்பாவையில் 14 இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பாவையில்......
இரண்டாவது பாடலில்.....பையாத் துயின்ற பரமனடி பாடி...எனவும் மூன்றாவது பாடலில்.....உத்தமன் பேர் பாடி...எனவும் ஐந்தாவது பாடலில்....வாயினால் பாடி...எனவும் ஏழாவது பாடலில்....கேசவனைப் பாடவும்...எனவும் எட்டாவது பாடலில்....பாடிப் பறை கொண்டு...எனவும் ஒன்பதாவது பாடலில்....நாமம் பலவும் நவின்று ...எனவும் பதினோறாவது பாடலில்.....முகில் வண்ணன் பேர் பாட ...எனவும் பனிரண்டாவது பாடலில்.....மனதுக்கினியானை பாடவும்...எனவும் பதிமூன்றாவது பாடலில்....கிள்ளிக் களைந்தானைக் கீர்திமை பாடி...எனவும் பதினான்காவது பாடலில்....பங்கயக் கண்ணனைப் ...எனவும் பதினைந்தாவது பாடலில்....மாற்றழிக்க வல்லான் மாயனைப்பாடல்...எனவும் பதினாறாவது பாடலில்.... துயிலெனப் பாடுவான்...எனவும் இருபத்தைந்தாவது பாடலில்....சேவாகமும் யாம் பாடி...எனவும் இருபத்தேழாவது பாடலில்.....பாடிப் பறை கொண்டு...எனவும்
பாடியுள்ளார்.
இதிலிருந்து இறைவனை பாடி வழிபாடு செய்வது சிறந்தது என்பதை ஆண்டாள் தெளிவுபடுத்தியுள்ளார்.