பதிவு செய்த நாள்
24
டிச
2019
01:12
உடுமலை:உடுமலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன; மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ’சர்ச்’கள் ஜொலிக்கின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், உடுமலை பகுதிகளில் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள, தேவாலயங்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை, பாடல் பவனி, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
தளி ரோடு, சி.எஸ்.ஐ.,இமானுவேல் ஆலயத்தில், கடந்த, 1ம் தேதி, கிறிஸ்துமஸ் கீத ஆராதனையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, முக்கிய வீதிகளில் பாடல் பவனி, குடும்ப கீத ஆராதனை, கிராமத்தில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை 25ம் தேதி அதிகாலை, 4:30க்கு, கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையும், 8:30க்கு, இரண்டாம் ஆராதனையும் நடக்கிறது.வரும், 29ம் தேதி, கலை நிகழ்ச்சிகள், 30ம் தேதி, ஜெபக்கூட்டம், 31ம் தேதி இரவு, 11:30க்கு, புத்தாண்டு திருவிருந்து ஆராதனை, ஜன.,1ம் தேதி, காலை, 8:30க்கு, இரண்டாம் ஆராதனை மற்றும் மாலை குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.