பதிவு செய்த நாள்
24
டிச
2019 
01:12
 
 கோவை:கோவை சுந்தராபுரத்தில் நடந்து வந்த, மார்கழி திருவிழா உற்சவம் நேற்றுடன் 23ம் தேதி, நிறைவடைந்தது.சுந்தராபுரத்தில் செயல்படும் மார்கழி திருவிழா குழு சார்பில், ஆறாம் ஆண்டாக ’மார்கழி திருவிழா’ எனும் ஆன்மிக நிகழ்ச்சி, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, இந்திரா நகரில் உள்ள செங்கப்பக்கோனார் திருமண மண்டபத்தில் கடந்த, 17ல் துவங்கியது. தினமும், மாலை, 5:30 மணிக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் கள் பேசினர். நிறைவு நாளான நேற்று 23ம் தேதி, ஜோதி பார்வதி குழுவினரின் பஜனை பாடல்கள் இடம் பெற்றன.