விருத்தாசலம் : பிரதோஷத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.மாலை 4:00 மணிக்கு மேல், நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.