புதுச்சேரி : புதுச்சேரி ராமானுாஜர் மடத்தில் வரும் 29ம் தேதி நடைபெறும் திருப்பாவை இசைப் போட்டியில் மாணவ மாணவியர், இல்லதரசிகள் பங்கேற்கலாம்.
புதுச்சேரி மகளிர் உலகம் சமூக இயக்கம் சார்பில், 11ம் ஆண்டாக திருப்பாவை இசைப்போட்டி வரும் 29ம் தேதி நடத்தப்படுகிறது. செயின்ட் தெரேஸ் வீதியில் உள்ள ராமானுாஜர் மடத்தில் காலை 9:00 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆர்வமுள்ள மாணவ மாணவியர், இல்லதரசிகள் பங்கேற்கலாம். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இசைப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுவழங்கப்படும். இத்தகவலை இயக்க தலைவர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.