கடலாடி : கடலாடி அருகே சபரித்தோட்டம்ஐயப்பன் கோயிலில் மார்கழி பூஜையை முன்னிட்டு சக்தி பூஜை நடந்தது.மூலவர் ஐயப்பனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப் பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்டார்.
பூஜைகளை குருநாதர்கருப்பையா, சற்குருநாதர் மகேந்திரன்ஆகியோர் செய்தனர்.சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானஐயப்ப பக்தர்கள் பங்கேற்று பஜனை, நாமாவளி, ஹரிவரா சனம் உள்ளிட்ட பாடல்களை பாடினர். கன்னிச்சாமி, படி பூஜைகள், அன்னதானம் நடந்தது.