டிசம்பர் என்ற சொல் டெசம் என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது. இந்த மாதத்தில் தான் இயேசு பிறந்தார். டெசம் என்பதையே இந்தியாவில் தசம் என்கிறோம். தசம் என்றால் பத்து. அந்தக் காலத்தில் மார்ச் முதல் மாதமாகவும், டிசம்பர் பத்தாவது மாதமாகவும் இருந்தது. இந்த அடிப்படையிலேயே இந்த மாதத்திற்கு பெயர் அமைந்தது. காலண்டர் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட காலங்களில் டிசம்பருக்கு 29 நாட்களே இருந்தது. ஜூலியஸ் சீசர் தான் இதை 31 நாட்களாகத் திருத்தினார். ஜெர்மனியில் டிசம்பரை கிறிஸ்துமஸ் மாதம் என்கின்றனர்.