1581ல் துாத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆலயத்தில் பங்குதந்தையாக இருந்தவர் ஜான் சேதலனோவா அடிகளார். இவர் இயேசு சுமந்த புனித சிலுவையின் சிறுபகுதி வேண்டி ரோம் சபைக்கு விண்ணப்பம் செய்தார். அது ஏற்கப்பட்டு, 1583ல் ஆகஸ்டில் சிலுவை மரத்துண்டின் சிறிய பகுதி மணப்பாடு ஆலயத்திற்கு வந்தடைந்தது. அதை மாதத்தின் முதல் வெள்ளியன்றும், திருவிழா நாட்களிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கின்றனர்.